நில அளவீடுகள்
1 சென்ட் – 40.47 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடி
1 ஏக்கர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்டர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்கர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்கர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்
ஏக்கர்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ
செண்ட்
1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ
ஹெக்டேர்
1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ
ஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை
•
10 கோண் = 1 நுண்ணணு
•
10 நுண்ணணு = 1 அணு
•
8 அணு = 1 கதிர்த்துகள்
•
8 கதிர்த்துகள் = 1 துசும்பு
•
8 துசும்பு = 1 மயிர்நுனி
•
8 மயிர்நுனி = 1 நுண்மணல்
•
8 நுண்மணல் = 1 சிறு கடுகு
•
8 சிறு கடுகு = 1 எள்
•
8 எள் = 1 நெல்
•
12 விரல் = 1 சாண்
•
2 சாண் = 1 முழம்
•
4 முழம் = 1 பாகம்
•
6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
•
4 காதம் = 1 யோசனை
• வழியளவை
•
8 தோரை(நெல்) = 1 விரல்
•
12 விரல் = 1 சாண்
•
2 சாண் = 1 முழம்
•
4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
•
2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
•
4 குரோசம் = 1 யோசனை
•
71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
நிலவளவை குழிக்கணக்கு வருமாறு
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
கன்வெர்ஷன்
1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்1
ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்
நில அளவை
100 ச.மீ
- 1 ஏர்ஸ்
100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்
1 ச.மீ - 10 .764 ச அடி
2400 ச.அடி - 1 மனை
24 மனை - 1 காணி
1 காணி - 1 .32 ஏக்கர்
144 ச.அங்குலம் - 1 சதுர அடி
435 . 6 சதுர அடி - 1 சென்ட்
1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்
100 சென்ட் - 1 ஏக்கர்
1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்
2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்
1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
100 சென்ட் = 4840 சதுர குழிகள்
1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஏக்கர் = 43560 சதுர அடி
1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
1 ச.மீ(Square Meter) = 1.190 குழி
1 குழி = 9 சதுர அடி
1 ச.மீ(Square Meter) = 10.76 சதுர அடி
1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்
1 குந்தா (Guntha) = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
20 மா = 1 வேலி
இதில்,
ஆவணங்கள்
அடிக்கடி
பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும்,
அவற்றின்
விளக்கங்கள்
விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி,சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்...
பொதுவாக
வீட்டுமனையின்
நீள
அகலங்கள்
அடிக்
கணக்கில்
அளவிடப்படுகிறது.
உதாரணத்திற்கு
பின்வரும்
படத்தினை
பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில்
காட்டியுள்ளபடி ஒரு வீட்டுமனையின் அளவுகள் இருந்தால், கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின்படி அந்த இடம்
மொத்தம் எவ்வளவு சதுர அடி உள்ளது என்பதை முதலில் காணக்கிட வேண்டும்.
மொத்த சதுரடி கணக்கிடும் முறை:
நீளமானாலும் சரி
அகலமானாலும் சரி அதன் எதிரெதிர் பக்கங்களின் அடி அளவுகளை கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
முதலில்
நீளத்தை
எடுத்துக்கொள்வோம்.
அந்த
இடத்தின்
இருபக்கங்களின்
நீளங்களை
கூட்டி அதை
இரண்டால்
வகுக்க
வேண்டும்.
அதேபோல்
அதன்
அகலங்களையும்
கூட்டி
இரண்டால்
வகுக்க
வேண்டும்.
அதாவது படத்தில்
காட்டியுள்ள
அளவுகளின்படி நீளம்
67+63=
130
அதை
இரண்டால்
வகுக்க
வேண்டும்.
130÷2=
65
பின்பு
அதன்
அகலங்கள்
32+35
=67
அதை
இரண்டால்
வகுக்கவும்
.
67÷2=
33.5
இப்போது
இதன்
இரண்டு
விடைகளையும்
பெருக்கினால்
வருவது
அந்த
வீட்டுமனையின்
மொத்த
சதுரடியாகும்
அதாவது
65×33.5=
2177.5 ஆக
2177.5
சதுர அடி.
என்பதே
அதன்
மொத்த
சதுரடி
ஆகும்.
மொத்த சென்ட் கணக்கிடும் முறை:
(1 ஏக்கர் = 100 சென்ட் அதாவது 1 ஏக்கர்=43560 சதுரடி) பொதுவாக 1 சென்ட் என்பது 435.6 சதுர அடியாகும். மேலே குறிப்பிட்டவாறு முதலில்
மொத்த சதுரடியை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். பின்பு மொத்த சதுரடியை 435.6 சதுரடியால் வகுத்தால் கிடைப்பது அந்த இடத்தின்
மொத்த சென்ட் அளவாகும். அதை பின்வருமாறு கணக்கிடலாம். படத்தில் உள்ள அளவின்படி
அதன் மொத்த சதுரடி =2177.5 அதை 435.6
ஆல் வகுத்தால்
வருவது :4.99
அதாவது அந்த
வீட்டுமனையின் அளவு 4.99 சென்ட
மொத்த
கிரவுண்ட்
கணக்கிடும்
முறை:
ஒரு கிரவுண்ட்
என்பது 2400
சதுரடி ஆகும் எனவே, மொத்த சதுரடியை 2400 ஆல் வகுத்தால் வருவது கிரவுண்ட் அளவாகும். அதை
பின்வருமாறு கணக்கிடலாம். 2177.5÷2400= 0.9072 அதாவது ஒரு கிரவுண்டுக்கும் சிறிது குறைவு.
சரி இந்தப் படத்தில்
|
காட்டியுள்ளபடி
அளவுகள்
இருந்தால்....
நீங்களே
முயற்சி
செய்யுங்கள்.
Super. Its very useful. Give me examples if unshaped grounds and triangle etc
ReplyDeleteபல தகவல்கள் தந்த மைக்கு நன்றி
ReplyDelete